Posts

தஞ்சை பெருங்கோவில் சிற்பங்களின் முன்னோடி மாதிரிகள் என, இச்சிறு கோவிலின் சிற்பங்கள் அணி வகுக்கின்றன !

Image
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலதிகமாயிற்று,,,, ஆயினும்,,,, அவர் ! எம்மன்னர் இருந்த காலம் போலில்லை,,,பிள்ளாய்,,! இந்த, பரணி நதியின் கிளை நதியான கடனாநதிக் கரையும்,, இந்த பிரம்மதேசமும். எவ்வளவு சிறப்புடையதாக இருந்தது? தெரியுமா ? எம்மன்னர் இராஜேந்திர சோழர் ! சேர பாண்டிய மன்னர்களை எதிர் கொள்ள,, இந்த பிரம்மதேசத்தில் தான்,,, ஒரு நிலைக்களப் படைப் பிரிவினையே அமைத்துக் காத்திருந்தார் ! தெரியுமா ? இதெயெல்லாம்,,சொன்னால்,, பழங்கதை,,,பேசுகிறாய் ? என்கிறார்கள் பிள்ளாய் ! அவர்களின் கண்களுக்கு,, தஞ்சை பெரிய கோவில் மட்டுமே ? கண்களுக்குத் தெரிகிறது ? பிள்ளாய்,,,, ம்ம்ம்ம் ஏன் ? உனக்கும் கூடத்தான்,,பிள்ளாய்,, ஹஹாஹாஹா,, என்ன சிரிக்கிறாய் ? உண்மை சொல்கிறேன் என்றா ? நானுன்னைத் தேடி வந்திருக்கிறேன் ! நீயென்னை நாடி வரவில்லை,,,? எங்கோ ? பயணித்தவன்,,? போகிற வழியில்,, என்னையும் பார்க்கிறாய் ? அதுவும்,,சரிதான்,,, ! உண்மைதான்,,, உன்னை வியக்கும்,,அளவிற்கு,, எனக்கு ஞானம் இல்லையோ ? நீ ! வியக்கும் அளவிற்கு,, நான் அழகில்லையோ ? அழகா ! பேரழகு ! தஞ்சை பெருங்கோவில் சிற்பங்களின் ,, முன்னோடி  மாதிரிகள் என,, இச்சிறு ...

நாட்டார் குளம் நடுகற்கள்

Image
தென்பாண்டி சீமை திருநெல்வேலி, செய்துங்கநல்லூர் அருகே இருக்கும் நாட்டார் குளம் நடுகற்கள் தான் இவை, பாண்டியர் காலமாக கருதப்படுகிறது.

கரவந்தபுரத்திற்குக் கரகிரி என்றும் களந்தை என்றும் இரு பெயர்களுண்டு என்று கல்வெட்டிலிருந்து தெரிகிறது

Image
17-ஆம் ஆட்சியாண்டில் கரவந்த புரத்திலிருந்து தோன்றிய மற்றொரு சிறந்த இராணுவ அதிகாரியைப் பற்றி ஏனாதி சாத்தன் வழங்கிய சாசனத்தில் (கி.பி. 782) குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தச் சாசனத்தை நிறைவேற்றியவன் திராதரன் மூர்த்தி அயினன் ஆவான். அவன் மஹாசாமந்தன் என்ற பதவி வகித்தான். அவனுக்கு "வீரமங்கலப் பேரரையன்' என்ற பட்டப்பெயரும் உண்டு, தளவாய்புரச் செப்பேடுபராந்தக வீரநாராயணனின் 45-ஆம் ஆண்டில் இச்சாசனம் வழங்கப்பட்டது, சில பிராமணர்களுக்குக் கிராமங்களைத் தானம் செய்து எல்லா அனுபவ பாத்திரங் களையும் (ஏகபோக உரிமை) அளித்தமையை இச்சாசனம் குறிப்பிடுகிறது. கரவந்தபுரத்தில் பராந்தக வீரநாராயணன் தங்கியிருந்த காலத்தில், இச்சாசனம் வழங்கப்பட்டது. ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் என்ற அரசன் பெயர் கொண்டு ஸ்ரீவல்லபமங்கலம் என்ற கிராமம் தானமாக வழங்கப்பட்டது என்றும் இச்சாசனம் கூறுகிறது. பெரிய சின்னமனூர்ச் செப்பேடுகள்மூன்றாம் இராஜசிம்மனின் 16-ஆவது ஆட்சியாண்டில் (கி.பி.916) வழங்கப்பட்ட இச்செப்பேடு, இவ்வரசன் தனித்து நின்று கரிகிரி” நாட்டின் குறு நில மன்னனான உக்கிர ளையும், அவனது யானைப்படையினையும் வெற்றி கொண்ட செய்திகளைக் குறிப்பிடுகி...

களக்குடியான கரவந்தபுரம் எனப்பட்ட உக்கிரன்கோட்டை...

Image
களக்குடியான கரவந்தபுரம் எனப்பட்ட உக்கிரன்கோட்டை, பாண்டியரின் முக்கியமான கேந்திரமாக விளங்கியது. இந்த ஊரைச் சுற்றி பாண்டியரின் கோட்டையும் அதனுள் வணிகக் குடியிருப்பு, பிரமதேயக் குடியிருப்பு, படைப்பற்று முதலானவை அமைந்திருந்ததாக, சாசனங்கள் அறிவிக்கின்றன. இந்த கோட்டையைச் சுற்றிலும் பல கி.மீ சுற்றளவிற்கு அகழி இருந்துள்ளது. அது இப்போது சுருங்கி 1கி.மீ வரை மட்டுமே காணப்படுகிறது. கோட்டையின் உட்பகுதிகள் பின்னாளைய குடியேற்றங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நவீன காலக் கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இங்கு பழமையான சிவாலயம் ஓன்று உள்ளது.முற்காலத்தில் இது மிகவும் பெருங்கோயிலாக இருந்திருக்க வேண்டும். இதன் தூண்கள், சிற்பங்கள் யாவும் வாள்வீச்சு ரஸ்தா ( முன்னாளைய படைப்பற்று) எனப்படும் மறவர் குடியிருப்பு பகுதிகளில் விரவிக் கிடக்கின்றன. அகழிக்குள் வந்து விழுந்தோடிய சிற்றாறு இப்போது தேங்கி கழிவுநீர்க் குட்டை போல உள்ளது.  11ம் நூற்றாண்டில் சோழருக்கடங்கி இங்கு பாண்டியரின் அரசு செயல்பட்டது எனும் தரவுகளும், சங்கரநயினார் கோயிலின் மூலக் கட்டிடப் பணிக்காக இந்த உக்கிரன்கோட்டையிலிருந்து மனிதச் சங்க...

போர்த்துகீசிய குறிப்புகளில் காணப்படும் "Iniquitriberim" என்பதுவேனாடு மன்னர் "உன்னி கேரள வர்மாவை" குறிக்கும்.

Image
யானைகள் மோதி கொள்வது, தென்காசி - கயத்தாறு மன்னர்கள் தங்களுக்குள் மோதி கொள்ளும் பங்காளி சண்டையை விவரிக்கும்  வகையில் இருக்கிறது. கிபி 1540 காலத்திய தென்னிந்திய வரை படம். 1. Territory of Tenkasi,  2. Vettum Perumal,  3. Marthanda Varma, Iniquitriberim, இவை விஜயநகர சாம்ராஜ்யத்தின் அங்கமல்லாத தனி தேசங்கள்.  போர்த்துகீசிய குறிப்புகளில் காணப்படும் "Iniquitriberim" என்பது வேனாடு மன்னர் "உன்னி கேரள வர்மாவை" குறிக்கும்.

ராஜராஜசோழன் காலத்தில் திருநெல்வேலி மாவட்டம்

Image
ராஜராஜசோழன் காலத்தில் திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம்  அருகே கட்டப்பட்ட பழமையான சிவன் கோயில் அயன் திருவாலீஸ்வரத்தில் கடனா நதிக்கரையில் உள்ளது. தற்போது மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது.  அருகில் பிரம்ம தேசத்தில் அமைந்துள்ள ஸ்ரீகைலாசநாதர் கோயிலும் ராஜராஜ காலத்தில் துவக்கப்பட்டதுதான்.   அதே பகுதியில் மன்னார்கோவில் ராஜகோபால சுவாமி கோயில் அதன் மூன்று அடுக்கு சன்னிதிகளில் மூலிகை ஓவியங்கள் அழகுற உள்ளன.

ராஜராஜவளநாட்டு பிரம்மதேயம் ராஜராஜ சதுர்வேதிமங்கலம்

Image
🌺 திருவாலீசுவரர் கோயில், இன்றைய  திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள திருவாலீஸ்வரம், என்ற ஊரில் அமைந்துள்ளது. இக்கோயில் இறைவன் வாலீசுவரர், இறைவி  சௌந்தர்யநாயகி ஆவார். 🌺 இக்கோயிலில் சோழர், சோழ பாண்டியர் மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயிலில் உள்ள முதலாம் ராஜராஜனின்  ஒன்பதாம்  ஆட்சியாண்டுக் கல்வெட்டு இவ்வூரை முள்ளிநாட்டு "ராஜராஜவளநாட்டு பிரம்மதேயம் ராஜராஜ சதுர்வேதிமங்கலம்" எனக் குறிப்பிடுகின்றது. பிரம்மதேசம், திருவாலீஸ்வரம் மற்றும் மன்னார்கோயில் ஆகிய இம்மூன்று ஊர்களும் ஒரே பகுதியாக ராஜராஜச் சதுர்வேதிமங்கலம் என்ற பெயரில் ஒரு பிரம்மதேயமாக விளங்கியுள்ளது. முதலாம் ராஜராஜனின் காலத்திலும் அவருக்கு பின்னும் இப்பகுதி ஒரு முக்கிய இராணுவ மையமாக விளங்கியுள்ளது.  🌺 இக்கோயிலின் சிற்பங்கள் சோழர் கலைப்பாணியை கொண்டு இருந்தாலும், இக்கோயில் கட்டிட அமைப்பு பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டு பின்னர் சோழர்களால் இவ்வூர் கைப்பற்றப்பட்ட போது விமானத்தில் உள்ள சிற்பங்கள் அமைக்கப்பட்டு இருக்கலாம். 🌺 இக்கோயிலானது கருவறை, அர்த்தமண்டபம், மஹா மண்டபம் என்...