கரவந்தபுரத்திற்குக் கரகிரி என்றும் களந்தை என்றும் இரு பெயர்களுண்டு என்று கல்வெட்டிலிருந்து தெரிகிறது

17-ஆம் ஆட்சியாண்டில் கரவந்த புரத்திலிருந்து தோன்றிய மற்றொரு சிறந்த இராணுவ அதிகாரியைப் பற்றி ஏனாதி சாத்தன் வழங்கிய சாசனத்தில் (கி.பி. 782) குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தச் சாசனத்தை நிறைவேற்றியவன் திராதரன் மூர்த்தி அயினன் ஆவான். அவன் மஹாசாமந்தன் என்ற பதவி வகித்தான். அவனுக்கு "வீரமங்கலப் பேரரையன்' என்ற பட்டப்பெயரும் உண்டு, தளவாய்புரச் செப்பேடுபராந்தக வீரநாராயணனின் 45-ஆம் ஆண்டில் இச்சாசனம் வழங்கப்பட்டது, சில பிராமணர்களுக்குக் கிராமங்களைத் தானம் செய்து எல்லா அனுபவ பாத்திரங் களையும் (ஏகபோக உரிமை) அளித்தமையை இச்சாசனம் குறிப்பிடுகிறது. கரவந்தபுரத்தில் பராந்தக வீரநாராயணன் தங்கியிருந்த காலத்தில், இச்சாசனம் வழங்கப்பட்டது. ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் என்ற அரசன் பெயர் கொண்டு ஸ்ரீவல்லபமங்கலம் என்ற கிராமம் தானமாக வழங்கப்பட்டது என்றும் இச்சாசனம் கூறுகிறது. பெரிய சின்னமனூர்ச் செப்பேடுகள்மூன்றாம் இராஜசிம்மனின் 16-ஆவது ஆட்சியாண்டில் (கி.பி.916) வழங்கப்பட்ட இச்செப்பேடு, இவ்வரசன் தனித்து நின்று கரிகிரி” நாட்டின் குறு நில மன்னனான உக்கிர ளையும், அவனது யானைப்படையினையும் வெற்றி கொண்ட செய்திகளைக் குறிப்பிடுகிறது. கரிகிரி என்னுமிடம் கரவந்த புரம் என்று ஒப்பு நோக்கப்படுகிறது. கோட்டைக் கொத்துவங்கள் நிறைந்த இந்நகரத்தை உக்கிரன் தனது தலை நகராக, அமைத்துக் கொண்டான். நெடுஞ்சடையன் பராந்தகனின் காலத்திலும், அதற்கு முன்பே இருந்தும் இவ்விம் கோட்டைக் கொத்தளங்கள் நிறைந்த இடமாகத் திகழ்ந்தது. வேணாட்டை வெற்றி கொண்டபின் நெடுஞ் சடையன் கரவந்தபுரத்தின் பாதுகாப்பைக் கருதி கோட்டை யையும் அரணையும் அமைத்தான். ஏனெனில், இந்நகரம் புதியதாக வெற்றி கொண்ட நாட்டின் எல்லையோரத்தில் அமைந்திருந்த து. பிற்காலக் கல்வெட்டுகள்சோழர்கள் ஆட்சிக்காலத்திலும் தொடர்ந்து இந்நகரம் முக்கிய நகரமாகத் திகழ்ந்தது. களக்குடி நாட்டிலுள்ள கரவந்தபுரத்தைச் சார்ந்த ஒருங்கை அரங்கன் என்பவன் அளித்த தானத்தைப் பற்றி, சுசீந்திரத்திலுள்ள முதலாம் பராந்தக சோழன் காலத்திய 10-ஆம் நூற்றண்டு வட் டெழுத்துக் கல்வெட்டொன்று குறிப்பிடுகிறது. கரவந்தபுரத்தைச் சேர்ந்த வணிகன் ஒருவன் தென் திருமாலிருஞ் சோலையிலுள்ள விஷ்ணுகோயிலுக்கு அளித்த தானத்தைப் பற்றி முதலாம் இராஜராஜ சோழனின் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது.உக்கிரங்கோட்டையிலுள்ள காடுபட்டிக் குளக்கரையில் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இது மாறவர்மன் சுந்தரபாண்டியன் (கி.பி. 1449) காலத்தில் பொறிக்கப் பட்டது.
 அதன்படி களக்குடியில் உள்ள 'அரிகேசரீஸ் வரம் உடைய நாயனார்', 'இயல் கட்டீஸ்வரம் உடைய நாயனார் என்னும் இரு கோயில்களின் தேவதானங்களின் மீது வரிவசூல் செய்து, அதைக் கொண்டு அங்குள்ள பூராந்தகபேரேரி என்னும் ஏரியைப் பராமரிக்கவும் ஆண்டு தோறும் தூறு எடுக்கவும் பயன்படுத்தியதாக மேற்கூறிய கல்வெட்டுக் குறிப்பிடுகின்றது.
கோட்டையும்_கோவில்களும்
குரியன்_கோவில்
பழைய கோட்டைகளையும் இடிபாடுகளையும் உக்கிரன் கோட்டையில் நாம் இன்றும் காணலாம். பண்டைய கோவில்களின் அடித்தளங்களும் ஆங்காங்கே காணப்படுகின்றன. கோட்டையின் கீழ்வாயிலில் சூரியனுக்கு ஒரு கோவில் இருந்தது. இச்செய்தியை இவ்வூரிலுள்ள சொக்க லிங்கேஸ்வரர் ஆலயத்திலுள்ள எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த சடையன் மாறனின் வட்டெழுத்துக் கல்வெட்டொன்று கூறுகிறது.
வடவாயில் அமர்ந்தாள் கோவில் கோட்டையின் வடவாயிலில் உள்ள அம்மன் கோவிலுக்கு ‘வடவாயில் நங்கை' என்றும் 'வடவாயிலில் அமர்ந்தாள்' என்றும் பெயர் காணப்படுகிறது. இக் கோவிலே தற்காலத்தில் சொக்கநாயகன் அம்மன் கோவில் என்று வழங்குகின்றது போலும். ஐநூற்றுவர் என்ற வணிகக் குழுவைச் சேர்ந்த இன்பன் தேவன் செட்டி என்பவன் இக்கோவிலின் திருச்சுற்றாலயத்தைக் கட்டுவித் தான். இதற்கு நகரத்தான் திருசுற்றாலயம் என்னும் பெயர் வழங்கப்பட்டது.சொக்கலிங்கேஸ்வரர் கோவில் இக்கோவிலில் வட்டெழுத்தில் பொறிக்கப்பட்ட பாண்டியர் காலத்தியகல்வெட்டுகள் பல காணப்படுகின்றன. நகரத்தார் என்னும் வணிகக் குழுவைச் சேர்ந்த ஒரு வணிகச் கட்டிய அம்பலத்தைப்பற்றிக் குறிக்கின்றது. அவ்வம்பலம் ‘நகரத்தான்" என்ற பெயராலேயே வழங்கிற்று. இச்சொக்க லிங்கேஸ்வரர் கோவிலே பழங்காலத்தில் 'அரிகேசரி ஈஸ்வரத்துத் தேவர்' என்று கல்வெட்டுகளில் குறிக்கப்படுகிறது போலும்.
விஷ்ணு_கோவில்
கோவிலின் மற்றொரு பாகத்தில் விஷ்ணுவுக்கு ஓர் ஆலயம் இருந்ததாகத் தெரிகிறது. வீஷ்ணுவுடைய அழகிய சிற்பம் ஒன்று இங்குக் காணப்படுகின்றது. இங்கு வாழ்ந்த மாறங்காரி அல்லது மதுரகவி என்னும் பாண்டிய அவைத் தலைவர் வைணவ பக்தராகத் திகழ்ந்தார் என்பதை அவர் ஆனைமலையில் எடுப்பித்த நரசிம்மரின் குகைக்கோவி லின் கல்வெட்டிலிருந்து நாம் அறியலாம்.
தொல்பொருள்_ஆய்வு
அண்மையில் உக்கிரங்கோட்டையில் இந்தியத் தொல் பொருள் ஆய்வுத்துறையினர் அகழ்வாய்வுகள் நடத்தினர். 
கோட்டையின் பழைய மதிலின் சில பகுதிகளும், மறைந் திருந்த அகழியின் சில பகுதிகளும் வெளிக்கொணரப் பட்டன. அந்தக் கோயிலின் மதிலுக்குப் பெரும் செங் கற்கள் பயன்படுத்தப்பட்டன.
 கோட்டையின் மொத்த பரப்பளவு 52.6 ஹெக்டார் என்று கண்டுபிடிக்கப்பட்டது. கோட்டையின் உட்புறத்தில் 7,8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கட்டட அடித்தளங்களும் அடையாளங்களும் கண்டெடுக்கப்பட்டன. 
மக்கள் வாழ்ந்த சிற்பங்கள்
உக்கிரங்கோட்டையின் பல பகுதிகளில், பாண்டி யர்கள் காலத்தைச் சார்ந்த எழில்மிகு சிற்பங்கள் காணப்படு கின்றன. வட புறத்திலுள்ள 'வடவாயில் அமர்ந்தாள்' அம்மனின் சிற்பமே மிக உன்னத சிற்பமாகும். எட்டு கை களைக் கொண்டு சினம் கொண்ட வடிவினளாக-காளியாகக் காட்சியளிக்கின்றாள் அன்னை. சொக்கநாயகி கோவிலில் பாண்டியர் காலச் சிற்பங்கள் பல காணப்படுகின்றன. அவற்றில் 'சப்தமா த்திகர்கள்' என்றும் ஏழு அன்னைமார்கள் சிற்பங்களும், பைரவர், விஷ்ணு போன்றோரின் சிற்பங்களும் மிகவும் அழகு வாய்ந்தவை.
 பாண்டியர் காலச் சிற்பக்கலைக்கு அவை உன்னத எடுத்துக் காட்டுகளாகக் காட்சிஅளிக்கின்றன. தொகுப்புச் செய்திகள் தரப்பட்டுள்ள குறிப்புகளிலிருந்து களக்குடி அல்லது கரவந்தபுரம் பாண்டியர் காலத்தில் ஒரு முக்கிய ஊராக விளங்கிற்று என்பது தெரிகின்றது. அரிகேசரி வர்மன் உதயண நாயனார் கோவில் என்பது அரிகேசரி பராங்குச மாறவர்மனை நினைவூட்டுகிறது. இவனது மகனான நெடுஞ்சடையன் பராந்தகனின் ஆட்சிக் காலத்தில் இவ்விடம் புகழ் அடைந்தது. இவனது அவை அதிகாரி கரில் பலரும், அமைச்சர்களும் இவ்வூரிலிருந்தவர்களே ஆவர்கள் என்பது தெரிகிறது; வைதிக குலத்தைச் சார்ந்த நிர்வாகத் திறன் கொண்டவர்களாகவும் கல்விமான் களாகவும் விளங்கினர். பல அதிகாரிகளும் மந்திரிகளும் இக்குலத்திலிருந்தே தேர்ந்தெடுக்கப்பட்டனர். இக் குலத்தைச் சேர்ந்த ஏனாதி சாத்தன் மிகச் சிறந்த தமிழ்க் கவிஞனாக மட்டும் அல்லாமல் பெரிய படைத்தலைவனாகவும் திகழ்ந்தான்.வேள்விக்குடிச் செப்பேட்டில் உள்ள தமிழ்ப் பகுதியை ஏனாதி சாத்தன் இயற்றினான். அது போன்று மாறங்காரி என்னும் மதுரகவி சிறந்த கவியாகவும் படைத் தலைவனாகவும் அமைச்சனாகவும் விளங்கினான். வேதப்பிராமணர்கள் 'சாலைகள்' என்னும் பள்ளிகளில் இருந்து படைப் பயிற்சியினைப் பெற்றனர் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். கரவந்தபுரத்திலும் இப்படிப் பட்ட பள்ளிகள் (கடிகா) இருந்திருக்கக்கூடும் என்று தெரி கிறது.நெடுஞ்செழியன் பராந்தகன் காலத்தில்தான் இவ்வூர் முன்னேற்றம் அடைந்தது; கோட்டைக் கொத்தளங்கள் பல கட்டப்பட்டன. இவனுக்குப் பின் வந்த பாண்டிய அரசர் களில் ஒருவன், பராந்தக வீரவர்மன். ஒரு சமயம் இங்கு வந்து சில ஆணைகள் பிறப்பித்தான்.அரசர்கள் பலர், சில நேரங்களில் கரவந்தபுரத்தில் தங்குவது வழக்கம் என்று தளவாய்புரச் செப்பேடுகளி லிருந்து நாம் நன்கு உணர முடியும். ஒரு சமயம் பராந்தக வீர நாராயணன் இத் தாமிர சாசனத்தை அளித்தான் எனலாம்.உக்கிரன் என்ற தலைவன் மூன்றாம் இராஜ சிம்மன் காலத்தில் இவ்விடத்தைக் கைப்பற்றிப் பாண்டியர்கள் ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தான். ஆனால் அவன் பாண்டியர்களால் பின்பு தோற்கடிக்கப்பட்டான். கரவந்தபுரத்திற்குக் கரகிரி என்றும் களந்தை என்றும் இரு பெயர்களுண்டு என்று கல்வெட்டிலிருந்து தெரிகிறது. இவ்வூரின் வடபகுதியை ‘வங்களந்தை' என்றும், தென் பகுதியை "தென் கனந்தை' என்றும் வழங்கினர் என்பது தெரிகிறது.பாண்டிய நாட்டில் கரவந்தபுரம் அரசியல், கலை துறைகளில் தலை சிறந்து விளங்கிற்று. இவ்வூரில் நகரத்தார்என்னும் வணிகப் பெருமக்கள் வாழ்ந்து வந்த பகுதி,இராஜசிங்கப் பேரங்காடி என்று வழங்கிற்று.அவர்கள் தாம் வாழ்ந்த இடத்தில் அமைந்திருந்த கோவில்களுக்குத் தானமும் கொடையும் வழங்கியும் புதியன வாகப் பல கட்டியும் போற்றி வந்தனர். ஐநூற்றுவர் என்ற வணிகர் சங்கமும் இங்கே செயலாற்றியது. சோழர்கள் காலத்திலும் இவ்வணிகர்கள் கோவில்களை ஆதரித்தும் போற்றியும் வத்திருக்கின்றனர். ஆனால் முதல் பாண்டியர் களின் ஆட்சியுடன் கரவந்தபுரத்தின் அரசியல் சிறப்பும், பெயரும் புகழும் மங்கியது என்று கூறலாம். 

Comments

Popular posts from this blog

சேரன்மகாதேவி, ஸ்ரீ ஆவுடைநாயகியம்மை உடனாகிய அம்மைநாத சுவாமி திருக்கோயில்,

இரும்புக்கால புதைவிடப்பகுதிஇடம்: #குன்னத்தூர்மாவட்டம் :திருநெல்வேலிவட்டம் : திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடி இணைக்கப்படவில்லை காரணம் என்னவென்றால்