களக்குடியான கரவந்தபுரம் எனப்பட்ட உக்கிரன்கோட்டை...

களக்குடியான கரவந்தபுரம் எனப்பட்ட உக்கிரன்கோட்டை, பாண்டியரின் முக்கியமான கேந்திரமாக விளங்கியது. இந்த ஊரைச் சுற்றி பாண்டியரின் கோட்டையும் அதனுள் வணிகக் குடியிருப்பு, பிரமதேயக் குடியிருப்பு, படைப்பற்று முதலானவை அமைந்திருந்ததாக, சாசனங்கள் அறிவிக்கின்றன. இந்த கோட்டையைச் சுற்றிலும் பல கி.மீ சுற்றளவிற்கு அகழி இருந்துள்ளது. அது இப்போது சுருங்கி 1கி.மீ வரை மட்டுமே காணப்படுகிறது. கோட்டையின் உட்பகுதிகள் பின்னாளைய குடியேற்றங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நவீன காலக் கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இங்கு பழமையான சிவாலயம் ஓன்று உள்ளது.முற்காலத்தில் இது மிகவும் பெருங்கோயிலாக இருந்திருக்க வேண்டும். இதன் தூண்கள், சிற்பங்கள் யாவும் வாள்வீச்சு ரஸ்தா ( முன்னாளைய படைப்பற்று) எனப்படும் மறவர் குடியிருப்பு பகுதிகளில் விரவிக் கிடக்கின்றன. அகழிக்குள் வந்து விழுந்தோடிய சிற்றாறு இப்போது தேங்கி கழிவுநீர்க் குட்டை போல உள்ளது.
 11ம் நூற்றாண்டில் சோழருக்கடங்கி இங்கு பாண்டியரின் அரசு செயல்பட்டது எனும் தரவுகளும், சங்கரநயினார் கோயிலின் மூலக் கட்டிடப் பணிக்காக இந்த உக்கிரன்கோட்டையிலிருந்து மனிதச் சங்கிலி வழியாக செங்கற்கள் கொண்டு செல்லப்பட்டன என்று செவிவழிக் கதைகளும் உள்ளன.

Comments

Popular posts from this blog

சேரன்மகாதேவி, ஸ்ரீ ஆவுடைநாயகியம்மை உடனாகிய அம்மைநாத சுவாமி திருக்கோயில்,

இரும்புக்கால புதைவிடப்பகுதிஇடம்: #குன்னத்தூர்மாவட்டம் :திருநெல்வேலிவட்டம் : திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடி இணைக்கப்படவில்லை காரணம் என்னவென்றால்