#இரும்புக்கால_புதைவிடப்பகுதி இடம்: #அயன்_திருவாலீஸ்வரம்_(காக்கநல்லூர்) மாவட்டம் : திருநெல்வேலி வட்டம் : அம்பாசமுத்திரம் அயன் திருவாலீஸ்வரம் (காக்கநல்லூர்) அம்பாசமுத்திரத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. காலம் : இரும்புக்காலம் பொது ஆண்டுக்கு முன் 3ம் நூற்றாண்டு முதல் - பொது ஆண்டுக்கு 3ம் நூற்றாண்டுக்குள் (3BCE - 3CE) இரும்புக்கால புதைவிடப்பகுதியின் எச்சங்கள் கடனாநதியாற்றிங்கரையில் அமைந்துள்ளது. இப்புதைவிடப்பகுதியானது 5ஹெக்டர் பரப்புளவில் அமைந்துள்ளது அப்பகுதியானது உள்ளூர் மக்களால் பரம்பு என அழைக்கப்படுகிறது. அவற்றில் கருப்பு சிவப்பு, சிவப்பு, கருப்பு பானையோடுகள், முதுமக்கள் தாழி, இரும்பிலான கத்திகள், வெள்ளை புள்ளிகளுடன் கூடிய கருப்பு சிவப்பு பானையோடுகள் மிகுந்த அளவில் பரவிக்காணப்படுகின்றன. மேலும் இப்பகுதியில் நாயக்கர் காலத்து சதிக்கல்லும் காணப்படுகிறது.
இத்திருக்கோயில் ஊருக்கு வடகிழக்கே தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது, முதலாம் இராசராசனால் எடுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இக்கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராசராசனின் 28-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் இவ்வூர் "முள்ளிநாட்டு பிரம்மதேயம் நிகரிலிச்சோழ சதுர்வேதி மங்கலத்து சோழேந்திரசிங்க ஈஸ்வரத்து........., என்றும் இறைவன் "கைலாயமுடைய மகாதேவர்" என்றும் குறிப்பிடுகின்றது. இக்கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள பிற்காலப்பாண்டியர் கல்வெட்டு களில் இவ்வூர் "சேரவன்மாதேவி சதுர்வேதி மங்கலம்" என்றும் இறைவன் "கைலாயமுடையார்" என்றும் "கைலாசமுடைய நாயனார்" என்றும் குறிப்பிடுகிறது. சில கல்வெட்டு செய்திகள்: • சடாவர்மன் சுந்தரபாண்டிய தேவன் - கைலாசமுடையாருக்கு நிகரிலி சோழ சதுர்வேதி மங்கல சபையார் நிலம் விற்றது. • மாறவர்மன் என்ற உடையார் பராக்கிரம சோழ பாண்டிய தேவர் இராசராச பாண்டிய நாட்டில் உத்தம சோழ வல்ல நாட்டின் பிரிவாகிய முல்லைநாடு பிரமதேயம் நிகரிலி சோழ சதுர்வேதி மங்கலத்திலுள்ள கைலாசமுடையாருக்கு விளக்குக்குப்பணம். • சட...
களக்குடியான கரவந்தபுரம் எனப்பட்ட உக்கிரன்கோட்டை, பாண்டியரின் முக்கியமான கேந்திரமாக விளங்கியது. இந்த ஊரைச் சுற்றி பாண்டியரின் கோட்டையும் அதனுள் வணிகக் குடியிருப்பு, பிரமதேயக் குடியிருப்பு, படைப்பற்று முதலானவை அமைந்திருந்ததாக, சாசனங்கள் அறிவிக்கின்றன. இந்த கோட்டையைச் சுற்றிலும் பல கி.மீ சுற்றளவிற்கு அகழி இருந்துள்ளது. அது இப்போது சுருங்கி 1கி.மீ வரை மட்டுமே காணப்படுகிறது. கோட்டையின் உட்பகுதிகள் பின்னாளைய குடியேற்றங்களால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு நவீன காலக் கட்டிடங்கள் கட்டப்பட்டிருக்கின்றன. இங்கு பழமையான சிவாலயம் ஓன்று உள்ளது.முற்காலத்தில் இது மிகவும் பெருங்கோயிலாக இருந்திருக்க வேண்டும். இதன் தூண்கள், சிற்பங்கள் யாவும் வாள்வீச்சு ரஸ்தா ( முன்னாளைய படைப்பற்று) எனப்படும் மறவர் குடியிருப்பு பகுதிகளில் விரவிக் கிடக்கின்றன. அகழிக்குள் வந்து விழுந்தோடிய சிற்றாறு இப்போது தேங்கி கழிவுநீர்க் குட்டை போல உள்ளது. 11ம் நூற்றாண்டில் சோழருக்கடங்கி இங்கு பாண்டியரின் அரசு செயல்பட்டது எனும் தரவுகளும், சங்கரநயினார் கோயிலின் மூலக் கட்டிடப் பணிக்காக இந்த உக்கிரன்கோட்டையிலிருந்து மனிதச் சங்க...
Comments
Post a Comment