தஞ்சை பெருங்கோவில் சிற்பங்களின் முன்னோடி மாதிரிகள் என, இச்சிறு கோவிலின் சிற்பங்கள் அணி வகுக்கின்றன !

ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலதிகமாயிற்று,,,,
ஆயினும்,,,,

அவர் !
எம்மன்னர் இருந்த காலம் போலில்லை,,,பிள்ளாய்,,!

இந்த,
பரணி நதியின் கிளை நதியான கடனாநதிக் கரையும்,,
இந்த பிரம்மதேசமும். எவ்வளவு சிறப்புடையதாக இருந்தது? தெரியுமா ?

எம்மன்னர் இராஜேந்திர சோழர் !
சேர பாண்டிய மன்னர்களை எதிர் கொள்ள,,
இந்த பிரம்மதேசத்தில் தான்,,,
ஒரு நிலைக்களப் படைப் பிரிவினையே அமைத்துக் காத்திருந்தார் ! தெரியுமா ?

இதெயெல்லாம்,,சொன்னால்,,
பழங்கதை,,,பேசுகிறாய் ? என்கிறார்கள் பிள்ளாய் !

அவர்களின் கண்களுக்கு,,
தஞ்சை பெரிய கோவில் மட்டுமே ? கண்களுக்குத் தெரிகிறது ? பிள்ளாய்,,,,

ம்ம்ம்ம்

ஏன் ?
உனக்கும் கூடத்தான்,,பிள்ளாய்,,

ஹஹாஹாஹா,,

என்ன சிரிக்கிறாய் ?
உண்மை சொல்கிறேன் என்றா ?

நானுன்னைத் தேடி வந்திருக்கிறேன் !

நீயென்னை நாடி வரவில்லை,,,?

எங்கோ ? பயணித்தவன்,,?
போகிற வழியில்,,
என்னையும் பார்க்கிறாய் ?

அதுவும்,,சரிதான்,,, !
உண்மைதான்,,,
உன்னை வியக்கும்,,அளவிற்கு,,
எனக்கு ஞானம் இல்லையோ ?

நீ !
வியக்கும் அளவிற்கு,,
நான் அழகில்லையோ ?

அழகா !
பேரழகு !
தஞ்சை பெருங்கோவில் சிற்பங்களின் ,,
முன்னோடி  மாதிரிகள் என,,
இச்சிறு கோவிலின் சிற்பங்கள் அணி வகுக்கின்றன !
கவனித்தாயா ?

ம்ம்ம்
மீண்டும் வருவாயா ?

மீண்டு வருகிறேன் !
ஒரு நாளின் பொழுதெல்லாம்,,இங்கேயே கழிக்கும் வண்ணமாய் வருகிறேன் !
தாமிரபரணி நதிக்கரையில்,,அம்பாசமுத்திரம் வட்டத்தில் மன்னார் கோவில் அருகே உள்ள பிரமதேசம் என்னும்  இச்சிற்றூரில்,,இராசேந்திர சோழமன்னர் தன் படைகளின்  நிலைக்களம் ஒன்றை வைத்திருந்தார். ஒரு காலத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்திருந்தது ! வாலிநாதசுவாமி கோவில் என்கிற இத்திருக்கோவில்,,,,
பிள்ளையும்,,
அந்த கற்கோவிலும்,,,,பேசிக் கொண்டிருந்த பொழுதில்,,,,

எழுத்து
திரு.அ.வேலுபிள்ளை, கோவை. 

Comments

Popular posts from this blog

சேரன்மகாதேவி, ஸ்ரீ ஆவுடைநாயகியம்மை உடனாகிய அம்மைநாத சுவாமி திருக்கோயில்,

இரும்புக்கால புதைவிடப்பகுதிஇடம்: #குன்னத்தூர்மாவட்டம் :திருநெல்வேலிவட்டம் : திருநெல்வேலி

திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடி இணைக்கப்படவில்லை காரணம் என்னவென்றால்