திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடி இணைக்கப்படவில்லை காரணம் என்னவென்றால்

அந்த நேரத்தில் ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் 
தூத்துக்குடி இணைக்கப்படவில்லை காரணம் என்னவென்றால்
12ஆம் நூற்றாண்டிலிருந்தே தூத்துக்குடி பகுதிகள் நீண்ட கடற்கரை வணிகப்பகுதிகளாக
கொற்கை பட்டினம் , குலசேகரப்பட்டினம் , காயல்பட்டினம், 
வீரபாண்டியபட்டினம், புன்னக்காயல், 
பழைய காயல் ஆகிய துறைமுகப் பகுதிகள் வணிக கேந்திரமாக விளங்கி உள்ளனஅதன் காரணமாக சீனர்கள், 
அரேபியர்கள்,பாரசீகத்தினர்கள்இந்தியர்களுக்கிடையே பண்டமாற்று வணிகம் நடைபெற்று ஏற்றுமதியும் இறக்குமதியும் செழிப்பாக இருந்தது 
பின்னர் ஐரோப்பியர் காலுன்றவும்
முதலில்15 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் ஆளுகைக்கு வந்தது , பின்னர் டச்சுக்காரர்களும் , பிரெஞ்சுக்காரர்களும் தூத்துக்குடி பகுதியில் கைப்பற்றினார்கள் 
அப்போதெல்லாம் தூத்துக்குடியும்
இலங்கையும் ஒரே ஆளுகைக்கு கீழே இருந்தது !
போர்த்துகீசியர்களின் ஆட்சியில் 
கீழமை நீதிமன்றங்கள் தூத்துக்குடியிலும் குற்றவாளிகளுக்கு சிறைச்சாலை 
கோவாவிலும் 
மேல் முறையீட்டு நீதிமன்றங்கள் கோவாவிலும் தண்டனை விதிக்கப்பட்ட விசாரணை கைதிகள் தூத்துக்குடியிலும் அடைக்கப்பட்டி ருந்தார்கள் !
15ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியில் தான்  புதிதாக வணிகம் செய்ய 
பிரிட்டன் வெள்ளையர்கள் முதலில் 
சென்னையிலும் தூத்துக்குடியிலும் 
கிழக்கிந்திய கம்பெனியை ஆரம்பித்தார்கள் !
வியாபாரம் போட்டியின் காரணமாக 
பிரிட்டீஸாரிடம் முதலில் டச்சுக்காரர்கள் போரிட்டார்கள் 
போரில் அவர்கள் விரட்டியடிக்கப்பட்டு 
நாகப்பட்டினம் ஓடிவிட்டார்கள் !
அதில் தூத்துக்குடியும் இலங்கையும் 
பிரிட்டன் ஆதிக்கத்தின் கீழ் வந்தது 
மீண்டும் ஒருமுறை போர் !
போர்த்துகீசியர்கள் கை ஓங்கி யிருந்த காலம் !
எனவே பிரெஞ்சுக் காரர்களும் 
பிரிட்டீஸாரும் ஒன்று சேர்ந்து போர்த்து கீசியர்களை தோற்கடித்தார்கள் !
போர்த்துக்கீசியர்கள் போரில் தோற்று கோவா ஓடிவிட்டனர் 
அதற்குப் பின்னர் எஞ்சியிருந்தது
பிரிட்டனும் , பிரஞ்சும் ஆகும் !
காலப்போக்கில் அவர்களுக்கிடையே
வணிகப் போட்டியில் பிரெஞ்ச் தோற்கடிக்கப்பட்டது !
ஆயினும் அவர்களுக்குள் சமாதான உடன்படிக்கை ஏற்பட்டது !
கடற்கரை எல்லைகளை அவர்கள் பிரித்துக் கொண்டார்கள் !
தூத்துக்குடியும் இலங்கையும் 
பிரிட்டிஷ் கைவசம் சென்றது 
காரைக்கால் நாகப்பட்டினம் கடலூர் 
பிரெஞ்சு வசம் சென்றது !
பிரிட்டனுக்கு ஒரு சில குறுநில மன்னர்கள் வரி வசூலிக்கும் தண்டல் காரர்களாக செயல்பட்டார்கள் 
ஸ்ரீவைகுண்டம் ஓட்டப்பிடாரம் 
ஆகியவைகள் முக்கியமான கேந்திரங்களாக கருதப்பட்டு 
நீதிமன்றங்கள் சிறைச்சாலைகள் உருவாக்கப்பட்டன 
நிலச்சீர்திருத்தம் செய்ய முறப்பநாட்டில் ( வல்லநாடு அருகே )
Centre point!
சப் ரிஜிஸ்தர் ஆபீஸ் உருவாக்கப்பட்டது!
அதற்குப் பிறகுதான் பிரிட்டிஷாரின் ஆளுகைகள் விஸ்தரிக்கப்பட்டு
ஆளுகைகளுக்கு மத்திய புள்ளியாக 
Centre point திருநெல்வேலியில்
East India company establish செய்யப்பட்டது !
அப்பொழுது வெள்ளைக்காரர்கள் 
சென்னையை மட்டும் பட்டினம் என்றார்கள் 
ஆனால் திருநெல்வேலி சீமை 
மதுரை சீமை , திருச்சி சீமை ,
தஞ்சாவூர் சீமை , வேலூர் சீமை 
என அழைக்கப்பட்டு அதற்கு 
வரி வசூல் செய்ய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டார்கள் !
அதுதான் செப் 1/1790 ஆகும் !

Comments

Popular posts from this blog

சேரன்மகாதேவி, ஸ்ரீ ஆவுடைநாயகியம்மை உடனாகிய அம்மைநாத சுவாமி திருக்கோயில்,

இரும்புக்கால புதைவிடப்பகுதிஇடம்: #குன்னத்தூர்மாவட்டம் :திருநெல்வேலிவட்டம் : திருநெல்வேலி