இரும்புக்கால_புதைவிடப்பகுதி

#இரும்புக்கால_புதைவிடப்பகுதி

இடம்: #அயன்_திருவாலீஸ்வரம்_(காக்கநல்லூர்)

மாவட்டம் : திருநெல்வேலி 
வட்டம் : அம்பாசமுத்திரம்
 அயன் திருவாலீஸ்வரம் (காக்கநல்லூர்) அம்பாசமுத்திரத்தில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. 

காலம் : இரும்புக்காலம் பொது ஆண்டுக்கு முன் 3ம் நூற்றாண்டு முதல் - பொது ஆண்டுக்கு 3ம் நூற்றாண்டுக்குள் (3BCE - 3CE)
இரும்புக்கால புதைவிடப்பகுதியின் எச்சங்கள் கடனாநதியாற்றிங்கரையில் அமைந்துள்ளது. இப்புதைவிடப்பகுதியானது 5ஹெக்டர் பரப்புளவில் அமைந்துள்ளது அப்பகுதியானது உள்ளூர் மக்களால் பரம்பு என அழைக்கப்படுகிறது. அவற்றில் கருப்பு சிவப்பு, சிவப்பு, கருப்பு பானையோடுகள், முதுமக்கள் தாழி, இரும்பிலான கத்திகள், வெள்ளை புள்ளிகளுடன் கூடிய கருப்பு சிவப்பு பானையோடுகள் மிகுந்த அளவில் பரவிக்காணப்படுகின்றன. மேலும் இப்பகுதியில் நாயக்கர் காலத்து சதிக்கல்லும் காணப்படுகிறது.

Comments

Popular posts from this blog

கொற்றவை என்னும் கலைப்பாகி

சேரன்மகாதேவி, ஸ்ரீ ஆவுடைநாயகியம்மை உடனாகிய அம்மைநாத சுவாமி திருக்கோயில்,