Posts

Showing posts from December, 2022

நாட்டார் குளம் நடுகற்கள்

Image
தென்பாண்டி சீமை திருநெல்வேலி, செய்துங்கநல்லூர் அருகே இருக்கும் நாட்டார் குளம் நடுகற்கள் தான் இவை, பாண்டியர் காலமாக கருதப்படுகிறது.

கரவந்தபுரத்திற்குக் கரகிரி என்றும் களந்தை என்றும் இரு பெயர்களுண்டு என்று கல்வெட்டிலிருந்து தெரிகிறது

Image
17-ஆம் ஆட்சியாண்டில் கரவந்த புரத்திலிருந்து தோன்றிய மற்றொரு சிறந்த இராணுவ அதிகாரியைப் பற்றி ஏனாதி சாத்தன் வழங்கிய சாசனத்தில் (கி.பி. 782) குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்தச் சாசனத்தை நிறைவேற்றியவன் திராதரன் மூர்த்தி அயினன் ஆவான். அவன் மஹாசாமந்தன் என்ற பதவி வகித்தான். அவனுக்கு "வீரமங்கலப் பேரரையன்' என்ற பட்டப்பெயரும் உண்டு, தளவாய்புரச் செப்பேடுபராந்தக வீரநாராயணனின் 45-ஆம் ஆண்டில் இச்சாசனம் வழங்கப்பட்டது, சில பிராமணர்களுக்குக் கிராமங்களைத் தானம் செய்து எல்லா அனுபவ பாத்திரங் களையும் (ஏகபோக உரிமை) அளித்தமையை இச்சாசனம் குறிப்பிடுகிறது. கரவந்தபுரத்தில் பராந்தக வீரநாராயணன் தங்கியிருந்த காலத்தில், இச்சாசனம் வழங்கப்பட்டது. ஸ்ரீமாற ஸ்ரீவல்லபன் என்ற அரசன் பெயர் கொண்டு ஸ்ரீவல்லபமங்கலம் என்ற கிராமம் தானமாக வழங்கப்பட்டது என்றும் இச்சாசனம் கூறுகிறது. பெரிய சின்னமனூர்ச் செப்பேடுகள்மூன்றாம் இராஜசிம்மனின் 16-ஆவது ஆட்சியாண்டில் (கி.பி.916) வழங்கப்பட்ட இச்செப்பேடு, இவ்வரசன் தனித்து நின்று கரிகிரி” நாட்டின் குறு நில மன்னனான உக்கிர ளையும், அவனது யானைப்படையினையும் வெற்றி கொண்ட செய்திகளைக் குறிப்பிடுகி...