Posts

Showing posts from October, 2022

ராஜராஜவளநாட்டு பிரம்மதேயம் ராஜராஜ சதுர்வேதிமங்கலம்

Image
🌺 திருவாலீசுவரர் கோயில், இன்றைய  திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் அருகே உள்ள திருவாலீஸ்வரம், என்ற ஊரில் அமைந்துள்ளது. இக்கோயில் இறைவன் வாலீசுவரர், இறைவி  சௌந்தர்யநாயகி ஆவார். 🌺 இக்கோயிலில் சோழர், சோழ பாண்டியர் மற்றும் பிற்காலப் பாண்டியர்களின் கல்வெட்டுகள் உள்ளன. இக்கோயிலில் உள்ள முதலாம் ராஜராஜனின்  ஒன்பதாம்  ஆட்சியாண்டுக் கல்வெட்டு இவ்வூரை முள்ளிநாட்டு "ராஜராஜவளநாட்டு பிரம்மதேயம் ராஜராஜ சதுர்வேதிமங்கலம்" எனக் குறிப்பிடுகின்றது. பிரம்மதேசம், திருவாலீஸ்வரம் மற்றும் மன்னார்கோயில் ஆகிய இம்மூன்று ஊர்களும் ஒரே பகுதியாக ராஜராஜச் சதுர்வேதிமங்கலம் என்ற பெயரில் ஒரு பிரம்மதேயமாக விளங்கியுள்ளது. முதலாம் ராஜராஜனின் காலத்திலும் அவருக்கு பின்னும் இப்பகுதி ஒரு முக்கிய இராணுவ மையமாக விளங்கியுள்ளது.  🌺 இக்கோயிலின் சிற்பங்கள் சோழர் கலைப்பாணியை கொண்டு இருந்தாலும், இக்கோயில் கட்டிட அமைப்பு பாண்டியர் காலத்தில் கட்டப்பட்டு பின்னர் சோழர்களால் இவ்வூர் கைப்பற்றப்பட்ட போது விமானத்தில் உள்ள சிற்பங்கள் அமைக்கப்பட்டு இருக்கலாம். 🌺 இக்கோயிலானது கருவறை, அர்த்தமண்டபம், மஹா மண்டபம் என்...

கொற்றவை என்னும் கலைப்பாகி

தமிழர் பண்பாட்டின் தாய் தெய்வ மரபில் ஆதியும் அந்தமுமாக நிற்பவள் கொற்றவை. அவ்வை எனுஞ்சொல் மூத்தவள் எனும் பொருள் தரும். அதனை ஒட்டியே இவள் பழையோள் என்று விளிக்கப் பெறுகிறாள். வேட்டை சமூகமாக இருந்தப்போது அவர்களின் வேட்டை தெய்வமாக கொற்றவை இருந்திருக்கிறாள். தமிழரின் பாலை நிலத்து தெய்வமும் போர் மற்றும் போர்க்குடிகளின் தெய்வம் கொற்றவையே. கொற்றவையைப் பற்றி விரிவாக எடுத்து இயம்பும் நூல் சிலப்பதிகாரமே ஆகும். சிலம்பின் வேட்டுவ வரியில் கொற்றவை வருணனை பேசப்படுகிறது, கலைமான் மீதும் எருமைத்தலை மீதும் நிற்கும் கொற்றவை என்றும், வீரர்கள் தலைகளை அறிந்து வைக்கும் பலி பற்றியும், கொற்றவை கோயிலில் நடக்கும் மரக்கால் கூத்தைப்பற்றியும் விரிவாய் வருகிறது இந்தப்பகுதியில்.  #1 மனிதர்மேல் ஆவேசிக்கும் தெய்வம்! தமிழ் நிலப்பரப்பின் ஒரு சிறப்பு இங்கு தெய்வங்கள் மனிதர் உள்ளே புகுந்து பேசும் எனும் நம்பிக்கை, வெறியாடும் வேலன் முதல் பின்னாளில் வைணவ நூல்கள் கூறும் பெருமாள் அர்ச்சகமுகமாக ஆவேசித்து பேசுதல் வரை இன்றைக்கும் பல தெய்வங்கள் மனிதருள் புகுந்து பேசும் வழக்கம் உண்டு. கொற்றவை அந்த வகையில் சாலினி எனும் பெண்மேல் ஆவேச...