Posts

சேரன்மகாதேவி, ஸ்ரீ ஆவுடைநாயகியம்மை உடனாகிய அம்மைநாத சுவாமி திருக்கோயில்,

Image
இத்திருக்கோயில் ஊருக்கு வடகிழக்கே தாமிரபரணி ஆற்றின் தென்கரையில் அமைந்துள்ளது,  முதலாம் இராசராசனால் எடுப்பிக்கப்பட்டிருக்க வேண்டும் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள்.  இக்கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள முதலாம் இராசராசனின் 28-ஆவது ஆட்சியாண்டுக் கல்வெட்டில் இவ்வூர் "முள்ளிநாட்டு பிரம்மதேயம் நிகரிலிச்சோழ சதுர்வேதி மங்கலத்து சோழேந்திரசிங்க ஈஸ்வரத்து........., என்றும் இறைவன் "கைலாயமுடைய மகாதேவர்" என்றும் குறிப்பிடுகின்றது. இக்கோயிலில் பொறிக்கப்பட்டுள்ள பிற்காலப்பாண்டியர் கல்வெட்டு களில் இவ்வூர் "சேரவன்மாதேவி சதுர்வேதி மங்கலம்" என்றும் இறைவன் "கைலாயமுடையார்" என்றும் "கைலாசமுடைய நாயனார்" என்றும் குறிப்பிடுகிறது. சில கல்வெட்டு செய்திகள்: • சடாவர்மன் சுந்தரபாண்டிய தேவன் - கைலாசமுடையாருக்கு நிகரிலி சோழ சதுர்வேதி மங்கல சபையார் நிலம் விற்றது. • மாறவர்மன் என்ற உடையார் பராக்கிரம சோழ பாண்டிய தேவர் இராசராச பாண்டிய நாட்டில் உத்தம சோழ வல்ல நாட்டின் பிரிவாகிய முல்லைநாடு பிரமதேயம் நிகரிலி சோழ சதுர்வேதி மங்கலத்திலுள்ள கைலாசமுடையாருக்கு விளக்குக்குப்பணம். • சட...

திருநெல்வேலி மாவட்டத்தில் தூத்துக்குடி இணைக்கப்படவில்லை காரணம் என்னவென்றால்

அந்த நேரத்தில் ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில்  தூத்துக்குடி இணைக்கப்படவில்லை காரணம் என்னவென்றால் 12ஆம் நூற்றாண்டிலிருந்தே தூத்துக்குடி பகுதிகள் நீண்ட கடற்கரை வணிகப்பகுதிகளாக கொற்கை பட்டினம் , குலசேகரப்பட்டினம் , காயல்பட்டினம்,  வீரபாண்டியபட்டினம், புன்னக்காயல்,  பழைய காயல் ஆகிய துறைமுகப் பகுதிகள் வணிக கேந்திரமாக விளங்கி உள்ளனஅதன் காரணமாக சீனர்கள்,  அரேபியர்கள்,பாரசீகத்தினர்கள்இந்தியர்களுக்கிடையே பண்டமாற்று வணிகம் நடைபெற்று ஏற்றுமதியும் இறக்குமதியும் செழிப்பாக இருந்தது  பின்னர் ஐரோப்பியர் காலுன்றவும் முதலில்15 ஆம் நூற்றாண்டில் போர்த்துகீசியர்கள் ஆளுகைக்கு வந்தது , பின்னர் டச்சுக்காரர்களும் , பிரெஞ்சுக்காரர்களும் தூத்துக்குடி பகுதியில் கைப்பற்றினார்கள்  அப்போதெல்லாம் தூத்துக்குடியும் இலங்கையும் ஒரே ஆளுகைக்கு கீழே இருந்தது ! போர்த்துகீசியர்களின் ஆட்சியில்  கீழமை நீதிமன்றங்கள் தூத்துக்குடியிலும் குற்றவாளிகளுக்கு சிறைச்சாலை  கோவாவிலும்  மேல் முறையீட்டு நீதிமன்றங்கள் கோவாவிலும் தண்டனை விதிக்கப்பட்ட விசாரணை கைதிகள் தூத்துக்குடியிலும் அடைக்கப்பட...

இரும்புக்கால புதைவிடப்பகுதிஇடம்: #குன்னத்தூர்மாவட்டம் :திருநெல்வேலிவட்டம் : திருநெல்வேலி

#இரும்புக்கால புதைவிடப்பகுதி இடம்: #குன்னத்தூர் மாவட்டம் :திருநெல்வேலி வட்டம் : திருநெல்வேலி #குன்னத்தூர் கிராமானது நெல்லையப்பர் கோவிலில் இருந்து பேட்டை வழியாக திருவேங்கடநாத கோவில் செல்லும் வழியில் 8 கி.மீட்டர் தொலைவில்  இக்கிராமம் அமைந்துள்ளது.  காலம் : இரும்புக்காலம் பொது ஆண்டுக்கு முன் 3ம் நூற்றாண்டு முதல் - பொது ஆண்டுக்கு 3ம் நூற்றாண்டுக்குள் (3BCE - 3CE) குன்னத்தூர் கிராமத்தின்  இரும்புக்கால புதைவிடப்பகுதியின் எச்சங்கள் அக்கிராமத்தில் உள்ள பரம்பில் ஆதிச்சநல்லூரை ஒத்த இரும்புக்கால புதைவிடப்பகுதி காணப்படுகிறது. தொல்லியல் எச்சங்களாக முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்பு, சிவப்பு, கருப்பு மட்பாண்டங்கள், இரும்பிலான பொருள்கள் மற்றும் வெள்ளை புள்ளிகளுடன் கூடிய கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள் போன்றவைகள் கிடைக்கின்றன. இந்த இரும்புக்கால புதைவிடப்பகுதியானது தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. மேலும் ஆதிச்சநல்லூரைப் போன்று இவ்விடம் மத்தியத்தொல்லியல் துறையால் பாதுக்காக்கப்பட்டு வரும் பகுதியாகும். தகவல் மற்றும் படம்: #மோ_பிரசன்னா திருநெல்வேலி தொல்லியல் கழகம்.