இரும்புக்கால புதைவிடப்பகுதிஇடம்: #குன்னத்தூர்மாவட்டம் :திருநெல்வேலிவட்டம் : திருநெல்வேலி
#இரும்புக்கால புதைவிடப்பகுதி இடம்: #குன்னத்தூர் மாவட்டம் :திருநெல்வேலி வட்டம் : திருநெல்வேலி #குன்னத்தூர் கிராமானது நெல்லையப்பர் கோவிலில் இருந்து பேட்டை வழியாக திருவேங்கடநாத கோவில் செல்லும் வழியில் 8 கி.மீட்டர் தொலைவில் இக்கிராமம் அமைந்துள்ளது. காலம் : இரும்புக்காலம் பொது ஆண்டுக்கு முன் 3ம் நூற்றாண்டு முதல் - பொது ஆண்டுக்கு 3ம் நூற்றாண்டுக்குள் (3BCE - 3CE) குன்னத்தூர் கிராமத்தின் இரும்புக்கால புதைவிடப்பகுதியின் எச்சங்கள் அக்கிராமத்தில் உள்ள பரம்பில் ஆதிச்சநல்லூரை ஒத்த இரும்புக்கால புதைவிடப்பகுதி காணப்படுகிறது. தொல்லியல் எச்சங்களாக முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்பு, சிவப்பு, கருப்பு மட்பாண்டங்கள், இரும்பிலான பொருள்கள் மற்றும் வெள்ளை புள்ளிகளுடன் கூடிய கருப்பு சிவப்பு மட்பாண்டங்கள் போன்றவைகள் கிடைக்கின்றன. இந்த இரும்புக்கால புதைவிடப்பகுதியானது தாமிரபரணி ஆற்றங்கரையோரம் அமைந்துள்ளது. மேலும் ஆதிச்சநல்லூரைப் போன்று இவ்விடம் மத்தியத்தொல்லியல் துறையால் பாதுக்காக்கப்பட்டு வரும் பகுதியாகும். தகவல் மற்றும் படம்: #மோ_பிரசன்னா திருநெல்வேலி தொல்லியல் கழகம்.